ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்

7 hours ago 4

டோக்கியோ,

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்க்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.

Read Entire Article