
சென்னை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் அஜித்குமார் (வயது 27) போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்டார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரனையை சிபிஐ வசம் ஒப்படைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நீதி விசாரணையும் நடைபெற்று வருகிறது.நகை திருட்டு வழக்கில் சட்டவிரோத காவலில் வைத்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வவேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தளத்தில் இவ்விவகாரத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருக்கிறார். எக்ஸ் தளத்தில் சாந்தனு கூறியிருப்பதாவது: மற்றொரு மனித உயிர் பறிபோயுள்ளது. அஜித்குமார் மரண விவகாரம் குறித்து தாமதாக பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். மற்றொரு சம்பவம், இன்னொரு உயிரிழப்பு. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.