ஜனாதிபதி வருகை.. சபரிமலையில் 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து

4 hours ago 2

திருவனந்தபுரம்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்திற்காக சபரிமலை வருவதை ஒட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் வருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

Read Entire Article