டெல்லி: ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 2.31 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பரில் 2.37%-ஆக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் ஜனவரியில் 0.06% குறைந்து 2.31 ஆக உள்ளது. 2024 டிசம்பரில் 8.89% ஆக இருந்த உணவுப் பொருள் பணவீக்க விகிதம் ஜனவரியில் 7.47% ஆக குறைந்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. டிசம்பரில் 3.79% குறைந்த எரிப்பொருட்களின் விலை ஜனவரியில் மேலும் 2.78 ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது
The post ஜனவரியில் மொத்த விலை பணவீக்க விகிதம் 2.31% appeared first on Dinakaran.