
தனுசு
தனுசு ராசி அன்பர்களே..
தாங்கள் எந்த நேரத்திலும் மற்றவர்களிடம் விலைபோகாதவர். ஆதலால் தங்களுக்கென்று ஒரு இடம் மனதில் என்றும் இருக்கும்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள்.
குடும்பத் தலைவிகளைப்பொருத்தவரை, தங்கள் கணவருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
கலைஞர்கள், ரசிகர்களின் உற்சாக மிகுதியால் பெரிதும் மனமகிழ்ச்சி அடைவதுடன் உங்கள் பொருளாதார வசதிகளும் பெருகும்.
வெளியூர்களில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவவர்கள் தங்களின் நடவடிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டியது மிக அவசியம்.
பரிகாரம்
வியாழக் கிழமை அன்று ராகவேந்தரை மனதார நினைத்து மஞ்சள் மாலையை அணிவித்து வழிபடுவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே..
உயர்ந்த குறிக்கோளுடன் இருப்பவர் நீங்கள். அதனை அடைந்தே தீரும் கொள்கையுடையவர். மொத்தத்தில் கடின உழைப்பாளி.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த இடமாற்றத்திற்கான அறிகுறிகள் தெரிய வரும். மற்றும் சம்பள உயர்வும் பெறுவீர்கள்.
வியாபாரம் செய்பவர்கள் உங்கள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளைப் பொருத்தவரை, கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவன் வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.
கலைஞர்களுக்கு விரும்பிய கதாபாத்திரம் கிடைத்து தாங்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் ஆசிரியரிடம் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நலம். இதனால் தாங்கள் நினைத்த மதிப்பெண்களை பெற வழிவகுக்கும்.
பரிகாரம்
குருபகவானுக்கு வியாழக் கிழமை அன்று கொண்டை கடலை மாலையை சாத்துவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே..
கடவுளுக்கு பூசை செய்வதை விட ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து ஏழைகளின் உள்ளத்தில் நீங்கா இடம் பெறுபவர். அன்பே சிவம் என்பதை உணர்ந்தவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
வியாபாரிகளுக்கு பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.
குடும்பத் தலைவிகளைப் பொருத்தவரையில், பிள்ளைகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கலைஞர்களுக்கு வேற்று மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அது தங்களுக்கு பெயர்சொல்லும் விதமாக அமையும்.
மாணவர்கள் தங்களின் பலவீனமான பாடத்தை பலமுறை படிப்பதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற இயலும்.
பரிகாரம்
காலபைரவருக்கு செவ்வாய் கிழமை அன்று மிளகு மற்றும் உப்பு தரிவிப்பது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே..
நீங்கள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனக்கு பிடித்த விசயத்தை செய்து கொண்டிருப்பவர். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்பதை எல்லாம் சிந்திக்காதவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.
வியாபாரிகளுக்கு அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.
குடும்பத் தலைவிகளுக்கு இடுப்பு மற்றும் மூட்டுகளில் வலி வந்து போகும். உடலை பராமரிப்பது நல்லது.
கலைஞர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்களுக்கு பிடித்தவரை தேடிச் சென்று பார்த்து அன்பு பரிமாறுவீர்கள். ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தேறும்.
மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம். அன்றன்றே சந்தேகத்தை தீர்த்துக் கொண்டால் தாங்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.
பரிகாரம்
ஆஞ்ச நேயருக்கு துளசி மாலையை சனிக்கிழமை அன்று சாத்தி வணங்குவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389