சென்னை: டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து, ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டவர்களை, அனுமதிக்காமல் கைது செய்தது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றதை சுட்டிக்காட்டி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியினரை, தி.மு.க அரசு கைது செய்ததும் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து இருப்பதும் மிகவும் கண்டிக்கதக்கது. ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.