திண்டுக்கல், ஜன. 21: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி கூறியுள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும், ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும்.
மேலும் பல்வேறு பிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். எனவே, மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஜன.26ல் குடியரசு தின கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.