சென்னை: மலிவான அரசியல் செய்வதை விடுத்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி செயல்படுவாரா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆத்தூர் அருகே வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ வெளியானது. வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு அய்யகோ என பதிவிட்டிருந்தார். வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தால் அதை வெளியிட்டதே அண்ணா தொழிற்சங்க நிர்வாகி உறவினர் என தெரியவந்தது. கள்ளச்சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பாம் வைப்பதும் நானே, எடுப்பதும் நானே என்ற கணக்கில் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக பதிவிடுகிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
The post ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவாரா?: அமைச்சர் ரகுபதி கேள்வி appeared first on Dinakaran.