ஜன.26ல் கிராமசபை கூட்டம்

2 weeks ago 3

 

விருதுநகர், ஜன.21: ஜன.26ம் தேதி 450 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜன.26ல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் கிராம நிர்வாக பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஜன.26ல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

The post ஜன.26ல் கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article