ஜன.14 முதல் 17 வரை ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ | நிகழ்விட விவரம்

4 months ago 12

சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13 அன்று தொடங்கி வைக்கிறார். ஜன.14 முதல் ஜன.17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 18 இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13 அன்று கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கிறார். சங்கமம் கலை நிகழ்ச்சிகள் ஜன.17 வரை தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன.

Read Entire Article