ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

3 hours ago 1

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள். சட்டம்-ஒழுங்கை தன்வசம் வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இனிமேலாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, கனிம வளக் கொள்ளையை முற்றிலும் ஒழித்துக் கட்டவும், மேற்படி கொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜகபர் அலி அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார். 

Read Entire Article