தேவையானவை:
சௌசௌ – 2
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து பருப்பு – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
தண்ணீர் தெளிக்க
செய்முறை:
சௌசௌவை தோல் நீக்கி, கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் வர மிளகாய் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின், கழுவிய எள் சேர்த்து ஈரம் காய்ந்து, நன்றாக வறுபட்டு வெடித்ததும் தனியே எடுத்து, இரண்டையும் ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சௌ சௌ சேர்த்து கிளரி,பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கி,100ml தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேக வைக்கவும். பத்து நிமிடங்களில் சௌ சௌ வெந்துவிடும். தண்ணீர் நன்றாக வற்றியதும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கிளறவும். மசாலா நன்றாக ஒட்டிப் பிடிக்கும் வரை மேலும் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு இறக்கவும்.
The post சௌ சௌ பொடிமாஸ் appeared first on Dinakaran.