சோழவந்தான், ஜூன் 24: சோழவந்தான் பேட்டை ராஜூ அம்பலம் மகனும், மதுரை வடக்கு மாவட்ட திமுக பிரமுகருமான சோழவந்தான் கிரி – விஜிபாலா தம்பதியரின் குழந்தைகள் அகல்யா, ஆதித்யா ஆகியோரின் காதணி விழா, சோழவந்தான் வி.ஜி மஹாலில் நடைபெற்றது. விழாவினை பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையேற்று நடத்தி வைத்து குழந்தை செல்வங்களை வாழ்த்தினார்.
இதில் எம்எல்ஏ வெங்கடேசன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். சோழவந்தான் கிரி அவர்களின் சகோதரர்களான, ஏஐஒய்எல் தேசிய செயலர் அசோக், பேரூர் திமுக துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் அனைவரையும் வரவேற்று சிறப்பாக உபசரித்தனர்.
The post சோழவந்தானில் திமுக நிர்வாகி இல்ல காதணி விழா அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு appeared first on Dinakaran.