விருதுநகர்: தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி பூத் கமிட்டி அமைத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகரில் திடீரென பூத் கமிட்டி ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் வந்திருந்தார்.
விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த பாஜ தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க’’ என நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் பெரும் அதிர்ச்சியடைந்தார். அப்போது குறுக்கிட்ட பாஜ நிர்வாகிகள், அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி சமாளித்து அவரை திருப்பி அனுப்பினர். இந்த வீடியோ வைரல் ஆவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ‘சோறு போடுறோம்.. ஓட்டு போட மாட்டோம்னு சொல்றாங்கய்யா…’: பாஜ தொண்டர் குமுறல் நயினார் நாகேந்திரன் ஷாக் appeared first on Dinakaran.