திருச்சி: ‘அரசியலில் அப்பா - மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு போட்டு உள்ளார். காரணம் ஏற்கெனவே மூன்று முடிச்சும் நீங்கள்தான் போட வேண்டும் என மணப்பெண் கூறியிருக்கிறார்.