![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38973170-somalia-afp.webp)
மொகாதிசு,
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 2011-ம் ஆண்டு கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்து வந்தனர். அந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகின. இதனால் சர்வதேச வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதனையடுத்து சர்வதேச கடற்படையின் ரோந்து பணியால் கடற்கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பிறகு கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் அங்குள்ள ஈல் கடற்பகுதியில் ஏமனுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தன. அவற்றை குறிவைத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். எனவே அதில் இருந்த மீனவர்கள் வேறொரு படகு மூலம் தப்பி கரையை அடைந்தனர். அதேசமயம் 3 கப்பல்களையும் ெகாள்ளையர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.