![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39010641-don.webp)
சென்னை,
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிராகன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், கடந்த 10-ம் தேதி டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன டான் படத்தை போலவே இப்படம் உள்ளதாக பலர் விமர்சிக்க துவங்கினர்.
இந்நிலையில், இந்த டிரோல்களுக்கு இயக்குனர் அஸ்வத் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'உங்களைப்போலவே நானும் இரண்டு வருடங்களுக்கு முன்பு டானை பார்த்திருக்கிறேன். 'ஓ மை கடவுளே' படத்திற்காக மக்கள் என்னை பாராட்டி இருக்கிறார்கள். பிரதீப் ஏற்கனவே ரூ.100 கோடி படத்தை கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கையில், எது உங்களை நான் மீண்டும் டானைபோல படம் இயக்குவேன் என்று நினைக்க வைத்தது' என்றார்.