சோனியா அகர்வாலின் "வில்" 2வது பாடல் வெளியானது

2 days ago 6

சென்னை,

இயக்குநர் சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "வில்". இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கறிஞராக பணியாற்றிய சிவராமன், தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சவுரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'வில்' படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நேசிக்குதே' எனத்தொடங்கும் இப்பாடலை கலை குமார் வரிகளில் பிரியா மல்லி பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Presenting the Electrifying second single #Nesikuthey From #Will Feel the magic of the music A mesmerizing treat Watch now https://t.co/mPYvzRrRGUSpecial appearance @vikranth_offlStaring @soniya_agg A @Saurabh_music22 Musical#DirSivaraman @footsteps__offpic.twitter.com/IPZNQL0NeW

— PREMGI (@Premgiamaren) March 28, 2025
Read Entire Article