
குருகிராம்,
அரியானா மாநிலம் குருகிராம் நகருக்கு அருகே டாடா பிரிமந்தி சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஒரு சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டான். 17 வயதான அவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் மாணவன் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
தான் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் இருந்த அவர், தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். உடனடியாக குடியிருப்புவாசிகள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறந்த மாணவனின் பெயர் சவுர்யா சாண்டில்யா என்று தெரியவந்தது.