காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ்... மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி

7 hours ago 2

புதுடெல்லி,

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மீண்டும் தொடங்குகிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லக்னோ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ. 3 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


Fast and Furious! Kiwi pacer Will O'Rourke joins the Super Giants family!

He replaces Mayank Yadav who is set to miss the rest of the season due to injury. pic.twitter.com/Gq8YKY8oTs

— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2025

Read Entire Article