சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படம்...2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

1 month ago 11

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது சோனாக்சி சின்ஹா தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் 'ஜடதாரா'. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இதில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா நடித்து வருகிறார்.

இது சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் சோனாக்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நடைபெற்று வந்த இப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கிறது. இதில், முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article