சொர்க்கத்தை காட்டுகிறேன் என கூறி.. இளம்பெண்ணை அழைத்து தனியார் ஊழியர் செய்த விபரீத செயல்

1 week ago 3

ஜெய்ப்பூர்,

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். இவருக்கு வயது 30. இவர் டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் உதய்ப்பூருக்கு பஸ்சில் வந்து இறங்கினார். உதய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தனது நண்பர்களுடன் தங்கினார். இரவு நேரம் நெருங்கியது. அந்த பிரான்ஸ் பெண், நண்பர்களுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட சென்றார். அப்போது ஹோட்டலில் நடந்த பார்ட்டியின்போது தனியார் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது தாம் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறினார். இதையடுத்து பிரான்ஸ் பெண் சகஜமாக அவரிடம் பேசியுள்ளார். இந்த வேளையில் அந்த நபர், ‛‛ வாங்க வெளியே போய் ஒரு தம் அடிக்கலாம். உங்களுக்கு இன்னொரு அழகான சொர்க்கத்தை காட்டுகிறேன்'' எனக்கூறியுள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பணிபுரியும் ஒரு தனியார் நிறுவனர் ஊழியர் தானே அவருக்கு நிறைய இடம்தெரியும் என்று பிரான்ஸ் பெண் சுற்றுலா பயணி நினைத்தார். இதையடுத்து அவரும் நம்பி அவருடன் சென்றார். இருவரும் காரில் ஒன்றாக சென்றனர்.

அப்போது அந்த நபர் தான் வசித்து வரும் வீட்டிற்கு அழைத்து சென்று அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒருவழியாக போராடி அந்த நபரிடம் இருந்து தப்பிய அந்த பிரான்ஸ் பெண் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து நடந்த சம்பவத்தை தனது தோழிகளிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அவரை தோழிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசிடம் பிரான்ஸ் பெண் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் சித்தார்த் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அவர் தலைமைறவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் அந்த பெண் அளித்த புகார் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதில் அவர் கூறியதாவது:-

டெல்லியில் இருந்து பஸ்சில் உதய்ப்பூருக்கு வந்தேன். இங்கு ஓய்வில் இருந்தேன். இரவில் எனது நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிட சென்றேன். அப்போது எங்களின் டேபிள் அருகே ஒருவர் வந்து சிகரெட் புகைக்க அழைத்தார்.

அழகான சொர்க்கத்தை காட்டுவதாக கூறினார். காரில் என்னை அழைத்து சென்றார். எனக்கு சிறிது சந்தேகம் வந்தது. இதனால் ஹோட்டலில் விடும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார். அங்கு கட்டிப்பிடிக்கும்படி கூறினார். நான் மறுத்தேன். அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். என் செல்போனில் சார்ஜ் இல்லை. நிலைமையை சமாளித்தபடியே அவரிடம் செல்போன் சார்ஜ் செய்ய சார்ஜர் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே என்னை கட்டிப்பிடித்தார். நான் துடிதுடித்துபோனேன். அவரது கோரப் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றேன். என்னால் முடியவில்லை. கதறி அழுதேன். ஹோட்டலுக்கு என்னை அழைத்து செல்ல கெஞ்சி அழுதேன். ஆனால் அந்த நபர் என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதன்பிறகு அதிகாலை 6 மணிக்கு என்னை ஹோட்டலில் கொண்டு வந்து விட்டு சென்றார்' என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இதுபற்றி உதய்ப்பூர் எஸ்பி யோகேஷ் கோயல் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்றார்.

Read Entire Article