சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி மாநில பொதுப் பணித்துறையில் மேற்பார்வை பொறியாளராகவும், அக்ரோ சர்வீஸ் அண்ட் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனில் பொது மேலாளராகவும் பணியாற்றியவர் சி.ஆனந்தன். இவர் கடந்த 1997 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.75 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில், ஆனந்தனின் மனைவி ஆனந்தி மற்றும் மகனும், என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-வுமான அசோக் ஆனந்த் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.