புதுடெல்லி: சொத்துவிவரங்களை தாக்கல் செய்வதற்கு தவறிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில், ‘‘சில குறிப்பிட்ட பணிகளில் சேருவதற்கு விஜிலென்ஸ் கிளியரன்ஸ் அவசியமாகும். கடந்த 2023ம் ஆண்டு 15 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், 2022ம் ஆண்டு 12 பேருக்கும், 2021ம் ஆண்டு 14 பேருக்கும் அந்தந்த ஆண்டுக்களுக்கான தங்களது அசையா சொத்து வருமானம் குறித்த விவரங்களை தாக்கல் செய்யாததால் விஜிலென்ஸ் கிளியரன்ஸ் மறுக்கப்பட்டது.
அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் சரியான நேரத்தில் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்வதை உறுதி செய்வதற்காக ஒரு குழுவை உருவாக்கலாம். கூடுதலாக இதுபோன்ற அதிகாரிகளுக்கு அபராதம் அல்லது திருத்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்யலாம். மொத்தம் அங்கீரிக்கப்பட்ட 6858 ஐஏஎஸ் அதிகாரிகளில் 1316 இடங்கள் காலியாக உள்ளது.இதனை நிரப்புவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் ”என்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்துள்ளது.
The post சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தவறினால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அபராதம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை appeared first on Dinakaran.