சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6% சொத்து வரி உயர்வு என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2024 செப்.5க்கு பின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையால் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. மீண்டும் 6% சொத்து வரி உயர்வு என இன்று நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. சொத்து வரி மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக வெளியான செய்தி வதந்தி என்றும் கூறியுள்ளது.
The post சொத்து வரி உயர்வு என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.