சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

3 months ago 20

*விழிப்புணர்வு கூட்டத்தில் பெரம்பலூர் எஸ்பி பேச்சு

பெரம்பலூர் : கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாட்டாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாதேவி கிராமத்தில் காவல்துறை சார்பாக நடைபெற்ற விழிப் புணர்வுக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பஷேரா தலைமையில், பெரம்பலூர் அருகேயுள்ள வடக்கு மாதேவி கிராமத்தில், கிராம பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்குவரத்து விதி முறைகளைக் கடை பிடித்தல்,சைபர்குற்றங்கள், தற்கொலைகள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆகியத் தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பெரம்பலூர் காவல்துறையின் சார்பாக நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, இளைஞர்கள், பெரியவர் கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையா வதால் அவர்களுக்கு விரை வில் சிறுமூளை பாதிக்கப் பட்டு நினைவாற்றல் குறைவதுடன், மூளை நரம்பு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். மதுவுக்கு அடிமை யாவதால் தன்னம்பிக்கை இழப்பதோடு, தன்னை மட்டுமன்றி தன் குடும்பத் தையே பாதுகாக்க முடியாத பரிதாப சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமண வயது எட்டிய பிறகுதான் திருமணம் நடத்தி வைக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் ஆண்களைவிட பெண்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தை திருமணம் சட்டபூர்வமாக தண்டனைக்குரிய குற்ற மாகும். குழந்தை திரும ணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர், திருமணம் செய்து கொள்ளும் மண மக்கள் திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளி யாக கருதப்படுவார்கள். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை உணர்ந்து குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தவிர்க்க அனைவரும் முன்வர வேண்டும்.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலைகள் ஒருபோதும்தீர்வாகாது. தற் கொலை மரணத்திற்கு யாரும் தாங்களாக உட்பட கூடாது.கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு வாகனங் களில்வருகின்ற இளைஞர் கள்.பொதுமக்கள்,.சாலை விபத்துகளை உயிரிழப்பு களைத் தவிர்க்க போக்குவ ரத்து சாலை விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பய ணிப்போர் கட்டாயம் ஹெல் மெட் அணிந்திருக்க வேண்டும், கார்களில் பய ணிப்போர் கட்டாயம் ஷீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவி யர் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாட்டா ளர்கள் நாளுக்கு நாள் அதி கரித்து வரும் சைபர் குற்ற ங்களில் சிக்கிக்கொள்ளா மல் எச்சரிக்கையாக இரு க்க வேண்டும். ஆசைகளை காட்டி மோசடிகளில் ஈடு படும் கும்பிடமிருந்து மிக வும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு கவ னக்குறைவின்றி பாதிக்கப் பட்டிருந்தால், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப் பிரிவில் தங்கள் புகார்களைத் தெரிவித்து தீர்வு காணலாம். கிராமப் புறங்களில் கொள்ளையர் நடமாட்டத்தை கண்காணிக் கவும், தடுக்கவும் கோவில், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் சிசிடிவி கேம ராக்களை பொருத்தி கண் காணிப்பது கிராம மக்க ளுக்கு மிகுந்த பாதுகாப் பையும் பயனையும் தரும்.

மது போதைக்கு அடிமையா வதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து, மனதளவி லும் உடலளவிலும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கப் படும் நிலைக்கு தள்ளப் படுவார்கள். எனவே போதைப் பழக்கத்தை முற் றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதா யத்தை உருவாக்க அனை வரும் பாடுபடுவோம் என்று கிராம பொதுமக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக் கியராஜ், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர்கலந்துகொண்டு பேசினர்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்தக் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் தங்களது பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர் கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையி னருக்கு தகவல் தெரிவிக்க லாம். தகவல்தெரிவிப்பவர் களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்என்றும் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

The post சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article