சேலம் மத்திய சிறையில் பொருட்கள் கொடுத்து கைதிகளின் உறவினர்களிடம் ‘ஜிபே’ மூலம் பணம் வசூல்: வார்டன் 2 பேர் சஸ்பெண்ட்

2 weeks ago 4

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளின் உறவினர்களிடம் ஜிபே மூலம் பணம் வசூலித்த வார்டன்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் 1,340 தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பயன்பாட்டிற்காக சிறைக்குள் கேண்டீன் மற்றும் பல்பொருள் அங்காடி உள்ளது. ஒவ்வொரு கைதிக்கும் குறிப்பிட்ட அளவிற்கு உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது. இதற்காக கைதிகளின் உறவினர்கள், சிறை நிர்வாக கணக்கில் பணத்தை செலுத்தியதும் அதற்குரிய பொருட்களுக்கான டோக்கன்களை கைதிகளிடம் சிறை அதிகாரிகள் வழங்குவார்கள். அந்த டோக்கன்களை வைத்து, அவ்வப்போது உணவு மற்றும் பொருட்களை கைதிகள் வாங்கிக் கொள்கின்றனர்.

சமீபத்தில் சிறையின் கேன்டீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறை விஜிலென்ஸ் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். சிறையில் பணியாற்றும் வார்டன்கள், முறைகேடாக கைதிகளிடம் பொருட்களை கொடுத்துவிட்டு அவர்களின் உறவினர்களிடம் இருந்து தங்களது சொந்த வங்கி கணக்கிற்கு ஜிபே மூலம் பணம் பெற்றுக்கொண்டதை கண்டறிந்தனர்.

இதுதொடர்பாக சிறை விஜிலென்ஸ் போலீசார், சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாளுக்கு அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உறவினர்களிடம் இருந்து ஜிபே மூலம் பணம் பெற்றதாக வார்டன்கள் அபிமன்னன், பாண்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம் சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத்திற்கு டிஜிபி உத்தரவின்படி, வார்டன்கள் அபிமன்னன், பாண்டி ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டார்.

The post சேலம் மத்திய சிறையில் பொருட்கள் கொடுத்து கைதிகளின் உறவினர்களிடம் ‘ஜிபே’ மூலம் பணம் வசூல்: வார்டன் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article