சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடைபெறுகிறது: தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

2 weeks ago 4

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடைபெற்றுவருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக ஆசிரியர்சங்கம் தமிழக அரசுக்கும் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் கடிதம் எழுதி வருகின்றனர். அதேபோல் நேற்றும் தமிழக அரசுக்கும் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் பெரியார் பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளது.

குறிப்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் பிரேம்குமார் பல்கலைகழகத்தில் நடக்கும் விதிமுறைகளை அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பணியிடை நீக்கத்திலேயே உள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானதாகும். பல்வேறு சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவுகள் இதனை தவறு என தெரிவித்தும் துணை வேந்தர் ஜெகநாதன் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளார். எனவே அவரை உடனடியாக பணிக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பட்டியலின ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நியாயமாக கிடைக்க வேண்டிய கோப்புகளை அனுப்பாமல் துணை வேந்தர் ஜெகநாதன் காலம்தாழ்த்தி வருகின்றாஎ. எனவே இது குறித்தும் உடனடியாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆசிரியர்களை மரியாதை குறைவாக நடத்துபவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வியல் துறைக்கு நிரந்தர பட்டியலின பெண் பேராசிரியர் இருக்கும்போது, தற்காலிக ஆசிரியையை துறை தலைவராக நியமித்தது கண்டிக்கதக்கது.

உயர்வேதியல் துறையில் கடந்த 2005-ம் ஆண்டு உதவி பேராசிரியையாக சேர்ந்த பட்டியலின பேராசிரியைக்கு இன்று வரை பதவி உயர்வு வழங்காமல் இருப்பதை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பட்டியலின பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் தொடர்சியாக இழுத்தடிப்பது பட்டியலின பேராசிரியர்களை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது. எனவே உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளருக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடைபெறுகிறது: தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article