
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சுண்ணாம்புகார தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள ஒரு கோவில் அருகே நின்று இருந்த செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த மணிமாறன் (வயது 31), திவாகர் (28) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 130 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் வீராணம் போலீசார் தைலனூர் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.