சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு!

1 month ago 5

சேலம்: சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த மகாதீர் முகமது என்பவர் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார். இவர் தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மற்ற நபர்கள் தங்களின் உடற்பயிற்சியை முடிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

மகாதீர் முகமது தானும் உடற்பயிற்சியை முடித்துவிட்டு குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றவுள்ளார். நீண்ட நேரமாகியும் மகாதீர் முகமது வெளியே வராததால் அவரது ஓட்டுநர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகாதீர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தபடி மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், அருகிலுள்ள பொதுமக்களின் உதவியுடன் மகாதீர்-ஐ சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகாதீர் முகமது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீவிரமாக உடற்பயிற்சி செய்துவிட்டு நீராவியில் குளித்தால் மகாதீர் முகமது உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article