சேரன்மகாதேவி, பத்தமடை பகுதியில் நாளை மின்தடை

4 weeks ago 4

தியாகராஜநகர், டிச. 18: நெல்லை மாவட்டம், பத்தமடை, சேரன்மகாதேவி, காணியாளர் குடியிருப்பு, சிங்கிகுளம், காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (19ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை அருகே கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணி நாளை (19ம் தேதி) வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கரிசல்பட்டி, பிள்ளைக்குளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நாளை (19ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சேரன்மகாதேவி, பத்தமடை பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Read Entire Article