
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சேலத்தில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.