செல்வப்பெருந்தகை பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

4 days ago 4

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதச்சார்பின்மைக் கொள்கையில் இருந்து வழுவாமல் நின்று இந்திய நாட்டின் அடிப்படைக் கருத்தியலைக் காக்கப் போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர், என்றும் வெற்றிக்காக நம்மோடு இணைந்து பாடுபடும் அன்புச் சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article