உளுந்தூர்பேட்டை, ஜன. 31: உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோடு சந்திப்பு பகுதியில் காய்கறி வார சந்தை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடக்கிறது. இந்த சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் சந்தையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை மர்ம நபர்கள் திருடி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் காய்கறி வார சந்தையில் மூன்று பேரின் விலை உயர்ந்த செல்போன்களை சிறுவன் திருடியதை கையும் களவுமாக பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் ஆந்திர மாநிலம் டோன் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. அந்த சிறுவனிடம் இருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து சிறுவனுடன் தொடர்புடைய செல்போன் திருடும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
The post செல்போன் திருடிய சிறுவன் கைது appeared first on Dinakaran.