சூதாட்ட புகாரில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீராங்கனைக்கு 5 ஆண்டுகள் தடை: ஐசிசி அதிரடி உத்தரவு

2 hours ago 2

டாக்கா: வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷோஹேலி அக்தர். 36 வயதான இவர் வங்கதேச அணிக்காக 2 ஒருநாள் போட்டி மற்றும் 13 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் கடந்த 2023ம் ஆண்டு தென்ஆப்ரிக்காவில் நடந்த டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடாத போதிலும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேசம்-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக 2023ம் ஆண்டு பிப். 14ம் தேதி அக்தர், சக வீராங்கனை ஒருவரை பேஸ்புக் மெசேஜ் மூலம் குரல் குறிப்புகளை அனுப்பி உள்ளார்.

அதில், ஹாட் விக்கெட் முறையில் விக்கெட் இழந்தால் பெரிய தொகை தருவதாக(2 மில்லியன் டாக்கா) சக வீராங்கனையிடம் ஷோஹேலி கூறியுள்ளார். இந்த உரையாடல் ரகசியமாக இருக்கும் என்றும், ஆம் அல்லது இல்லை என்று கூறுவது பொறுத்தது என்றும் அக்தர் கூறினார். ஆனால் இதனைஅந்த வீராங்கனை நிராகரித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவில் (ஏசியு) புகார் அளித்து குரல் குறிப்புகளின் நகல்களின் வடிவத்தில் ஆதாரங்களையும் வழங்கினார். இது தொடர்பாக விசாரணையின் போது ஷோஹேலி அக்தர் குரல் செய்திகளை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தின் 5 விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்ட ஷோஹேலி அக்தருக்கு கிரிக்கெட் ஆட 5 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்ததடை பிப். 10ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The post சூதாட்ட புகாரில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீராங்கனைக்கு 5 ஆண்டுகள் தடை: ஐசிசி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article