செல்போனில் கேம் விளையாட எதிர்ப்பு: பெற்றோர், அக்காவை கல்லால் அடித்துக்கொன்ற கல்லூரி மாணவன்

3 hours ago 2

பாட்னா,

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டம் ஜெயபடாசெதி ஷகி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கலியா (வயது 65). இவரது மனைவி கனக்லதா (வயது 62). இந்த தம்பதிக்கு ரோஸ்லின் (வயது 25) என்ற மகளும், சூர்யகாந்த் (வயது 21) என்ற மகனும் இருந்தனர். சூர்யகாந்த் கல்லூரி பயின்று வந்தார்.

இதனிடையே, சூர்யகாந்த் செல்போனில் ஆன்லைன் கேமிற்கு அடிமையாக இருந்துள்ளார். தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்த சூர்யகாந்த் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், அவரது பெற்றோரும், அக்காவும் செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சூர்யகாந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தந்தை பிரசாந்த், தாயார் கனக்லதா, அக்கா ரோஸ்லின் ஆகிய 3 பேரையும் கல்லால் அடித்துக்கொன்றார்.

3 பேரையும் கல்லால் அடித்துக்கொன்ற பிறகு சூர்யகாந்த் அருகில் உள்ள கிராமத்தில் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிராமத்தில் பதுங்கி இருந்த சூர்யகாந்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article