"டிராகன்" படத்தின் "வழித்துணையே" வீடியோ பாடல் வெளியானது

3 hours ago 2

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக 'வழித்துணையே' மற்றும் 'ஏன் டி விட்டுப் போன' பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் 'வழித்துணையே' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர்.

Pack your bags, hit play, and let the journey begin! ✈️ #Vazhithunaiye video song out now! ❤️✨Watch here▶️: https://t.co/zk5NqmlZqS@pradeeponelife in & as #DragonA @Dir_Ashwath Araajagam A @leon_james Musical #PradeepAshwathCombo#DragonRunningSuccessfullypic.twitter.com/lcg8HSWf5B

— AGS Entertainment (@Ags_production) March 3, 2025
Read Entire Article