
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, செய்யாறு சிப்காட் - எண்ணூர் துறைமுகத்திற்கு செல்லும் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுமா என்று துணைத் பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று செய்யாறு சிப்காட் - எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், சிப்காட்டில் உற்பத்தி பொருட்கள் எளிதாக துறைமுகம் கொண்டு செல்லப்படும். திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று பதில் அளித்தார்.