'செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை செய்தாலும் மனித கைகளும், இதயமும் தேவை' - மத்திய மந்திரி

3 hours ago 1

பெர்ன்,

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரி ஜெயந்த் சவுத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே பல்வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் உலகிற்கு இன்னும் மனித கைகளும், இதயமும், மூளையும் தேவைப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு உருவமற்றது. இந்தியாவில் அதன் பெயர் உண்மையானது அல்ல என்று பொருள் தரும் வகையில் 'நக்லி'(naqli) என்று அழைக்கப்படுகிறது.

எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இளம் திறமையாளர்களை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களை இளைய தலைமுறையினருக்கு பள்ளி அளவிலேயே வழங்குவது நமது கடமையாகும்.

இந்தியாவில் இருந்து ஒரு பயிற்சி பெற்ற தொழிலாளர் ஐரோப்பாவிற்கு வரும்போது, அவருக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் நமது திறன்களை மறுஆய்வு செய்யக்கூடிய நாளாகவே நான் பார்க்கிறேன்."

இவ்வாறு மத்திய மந்திரி ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார். 

Read Entire Article