சிட்னி,
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போலவே மகளிர் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடைசியாக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு: அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லீ கார்ட்னர், கிம் கார்த், அலானா கிங், போப் லிட்ச்பீல்ட், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எல்லிஸ் பெர்ரி, மேகன் ஸ்கட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்.