செம்பனார்கோயில் பகுதியில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

4 months ago 14

 

செம்பனார்கோயில், பிப்.22: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற வாள்நெடுங்கன்னி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மாலை தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டங்களில் பல்வேறு நறுமண பொருட்கள் செலுத்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி தான்தோன்றீஸ்வரர், வாள்நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கும் சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

 

The post செம்பனார்கோயில் பகுதியில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article