திண்டுக்கல், அக். 15: சென்னையில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் பரணி குமார் ஓட்டி வந்தார். நேற்று காலை பஸ் திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி பகுதியில்வந்து கொண்டிருந்தது. அதேபோல் திண்டுக்கல் நோக்கி மரக்கட்டைகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை ஆத்தூரை சேர்ந்த பக்ரூதீன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் வேகமாக மோதி கொண்டது. அதேசமயம் லாரியின் பின்னால் வந்த தேனியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ்- லாரியின் முன்பகுதிகள் உருக்குலைந்து போயின.
இதுபற்றி தகவலறிந்ததும் திண்டுக்கல் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் மற்றம் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி லாரி மெக்கானிக் நத்தம் குமரபட்டியை சேர்ந்த கணபதி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவர் பக்ருதீன், ஆம்னி பஸ் டிரைவர் பரணிகுமார் (54) மற்றும் பஸ்சில் பயணம் செய்த சங்கரி, ஈஸ்வரி (60), திருப்பதி (45), வனிதா (35), சரவண சிவணான்டி (40), பிரகாஷ் (34), கலைமதி (58), ராஜேந்திரன் (64) உள்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செம்பட்டி அருகே ஆம்னி பஸ்- லாரி மோதல்: ஒருவர் பலி appeared first on Dinakaran.