செப்டம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்: ஒரேநாளில் 3.7 லட்சம் பேர் சென்றனர்

1 month ago 11

திருவொற்றியூர்: செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு, நம்பகத்தன்மையான பாதுகாப்பையும் வழங்குகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக செப்.6ம் தேதி 3,74,087 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கியுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் மற்றும் போன் பே போன்ற அனைத்து வகையாக பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் செயலி மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செப்டம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்: ஒரேநாளில் 3.7 லட்சம் பேர் சென்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article