சென்னையில் விட்டு விட்டு பெய்யும் மழை

2 months ago 12

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. நள்ளிரவில் பெய்த மழையால் கிழக்கு கடற்கரை சாலையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

தொடர்ந்து, காலை முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர் சற்று சிரமத்தை சந்தித்தனர். சென்னையின் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article