
சென்னை,
சென்னை பாடி மேம்பாலம் அருகே, இருசக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூவரும் கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி ஏறி இறங்கியதில், தாய் பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குழந்தை கரோலின் (1) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தந்தை சரவணன், அருகில் உள்ள மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில், போக்குவரத்துக் காவலர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.