தனுஷ் படத்தில் மட்டும் தான் அது இல்லை - நடிகை வித்யுலேகா வருத்தம்

4 hours ago 1

சென்னை,

நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகையான இவர் 'வீரம், புலி, ஜில்லா' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது 'தி வெர்ட்டிக்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவருக்கு 2021ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அவர் அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வித்யுலேகா தன்னை உருவ கேலி செய்வது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதாவது, "நான் நடித்த எல்லா படங்களிலும் இயக்குநர்கள் என்னை உருவ கேலி செய்யும் காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்தனர். ஆனால், தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பா.பாண்டி' படத்தில் மட்டுமே என்னை உருவ கேலி செய்யவில்லை" என்று கூறியுள்ளார். 

Read Entire Article