சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கு: ஜாமின் கோரி வருமான வரித்துறை அலுவலர் மனு

4 hours ago 2

சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் ஜாமின் கோரி வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன், வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்கும் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் . சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பணம் பறித்தனர்.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர்கள் எந்த கருணையும் பெற தகுதி அற்றவர்கள் என கருத்து தெரிவித்து ஜாமின் மனு மீதான விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் இருவரின் மனுக்களுக்கு காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கு: ஜாமின் கோரி வருமான வரித்துறை அலுவலர் மனு appeared first on Dinakaran.

Read Entire Article