எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!!

8 hours ago 2

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி. ஆர் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, நாசர், அன்பரசன் ஆகியோர் எம்.ஜி. ஆர் உருவ படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி. ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது. இதே போன்று சென்னை போயஸ் கார்டனில் எம்.ஜி. ஆரின் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆர் பல நல்ல திட்டங்களை வழங்கி உள்ளதாக கூறினார். இதே போன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் எம்.ஜி. ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!! appeared first on Dinakaran.

Read Entire Article