
சென்னை அடுத்த பெருங்குடியில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இரும்பு ராடுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இன்று அதிகாலையில் ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு ராடுகளை திருட முற்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர், அவர்களை தடுக்க முற்பட்டார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், கீழே கிடந்த கற்களை எடுத்து பாதுகாவலரை நோக்கி வீசினர். இதுகுறித்து பெருங்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, திருட முயற்சி செய்தவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.