சென்னையில் மூலிகை அழகுசாதனம், தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

4 hours ago 2

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள், தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 28.5.2025 முதல் 30.5.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு, ஃபேஸ் வாஷ் ஜெல், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600032 என்ற முகவரியிலும், 8668102600 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article